திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் – வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகக் காற்றுடன் மழை பெய்தது.
இரு நாட்களாக மழை குறைந்து, காற்று வீசி வந்த நிலையில், கொடைக்கானல் – வத்தலகுண்டு பிரதான சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பெருமாள் மலைப் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மலை சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.
















