சட்டமன்ற தேர்தலை ஒட்டிச் சேலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டுத் தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி, அதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதன்படி மாநிலம் முழுவதும் இன்று முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடங்கியது.
அதன் ஒரு பகுதியாகச் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இப்பணியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.
பெங்களூருவை சேர்ந்த பெல் நிறுவன பொறியாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்து வருகின்றனர். இப்பணி ஜனவரி 24ம் தேதிவரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















