ஒகேனக்கல் அருகே பள்ளி மாணவியைக் கேலி செய்ததால் தேங்காய் வியாபாரி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி காவிரி ஆற்றில் கடந்த 7ஆம் தேதி கைகள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், நீலகிரி தோப்பு வனப்பகுதியில் ஆண் சடலம் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்துப் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்த நபர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி ருத்ராட்ச ராவ் என்பது தெரியவந்தது.
பள்ளிக்கும் செல்லும் 12ஆம் செல்லும் மாணவியை ருத்ராட்ச ராவ் கிண்டல் செய்ததால் உறவினர்கள் 3 பேர் சேர்ந்து கழுத்தை அறுத்துக் கொலை செய்து ஆற்றில் வீசியதும் தெரியவந்தது.
இதனை அடுத்து, உறவினர்களான முருகேசன், நாகராஜ், மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
















