சென்னையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கி ஒருமாத காலம் நடைபெற உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் குமர குருபரன் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் சென்னைக்கு 27 ஆயிரம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மாவட்ட தேர்தல் அலுவலர் குமர குருபரன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி, இன்று தொடங்கி ஒருமாத காலம் நடைபெறும் எனத் தெரிவித்தார். ஒரு நாளில் 250 முதல் 300 இயந்திரங்களை ஆய்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
















