அமெரிக்காவின் கல்போர்னியா மாகாணத்தில் கட்டுமான பணியின் போது எரிவாயு குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகப் பல வீடுகள் சேதமடைந்தன.
கலிபோர்னியாவின் ஹேவர்ட் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது எரிவாயு குழாயில் சேதம் ஏற்பட்டதால் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் பல வீடுகள் சேதமடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
















