மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பணிச்சுமை காரணமாக இடைநிலை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூவாலை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன், தத்தங்குடி தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இவருக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கூடுதலாக விடுதி காப்பாளர் பொறுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடைய கூடுதல் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மகேந்திரன் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.
















