ஆந்திராவில் நீரில் தரையிறங்கும் விமானங்களை இயக்குவதற்காக ஏழு இடங்களில் நீர் விமான நிலையங்கள் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு முதற்கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்தாண்டு ஆந்திராவின் விஜயவாடா மாவட்டம் பிரகாசம் அணையில் இருந்து நாண்டியால் மாவட்டம் ஸ்ரீசைலம் வரை மாதிரி நீர் விமானத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு ஆந்திர பிரதேச விமான நிலையங்கள் மேம்பாட்டு நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் ஏழு இடங்களில் நீர் விமான நிலையங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட பின்பு சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
















