மொராக்கோவில் 2 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் இரண்டாவது பெரிய நகரமான பெஸில் 2 அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்த நிலையில் காணப்பட்டன.
இதில் சுமார் 20 குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில் திடீரென அந்தக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 பேர் உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 16 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
















