பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்த துரந்தர் படத்துக்கு மேற்காசியாவில் உள்ள ஆறு நாடுகள் தடை விதித்துள்ளன.
ரன்வீர் சிங் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே சமீபத்தில் துரந்தர் படம் வெளியானது. இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், பாகிஸ்தானின் லியாரி பகுதியில் இந்திய உளவுத்துறை மேற்கொண்ட ரகசிய நடவடிக்கைகள் தொடர்பான உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் துரந்தர் படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாகக் கூறி, மேற்காசிய நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகியவை படத்தை தங்கள் நாடுகளில் வெளியிடத் தடை விதித்துள்ளன.
















