பிரிட்டனின் பிரிஸ்டல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த 600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் அருங்காட்சியகத்தின் சேமிப்பு கிடங்கில், இந்தியாவின் காலனித்துவ காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கலைப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
அவற்றை கும்பல் ஒன்று திருடிச் சென்றுள்ளது. கடந்த செப்டம்பர் 25ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான, அதிகாரப்பூர்வ தகவலையும், சிசிடிவி காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம் குறித்து, தற்போது போலீசார் தகவல் வெளியிட்டு இருப்பதால், பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
















