ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் 14 ஆயிரம் அடி உயரம் கொண்ட அஃபர்வத் சிகரத்தில் சுழலும் உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குல்மார்க்கில் கோண்டோலா என்ற கேபிள் கார் ரைடு, பனி சறுக்கு, Igloo கஃபே உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.
அந்தவகையில் குலல்மார்க்கின் திறக்கப்பட்டுள்ள சுழலும் உணவகம் மற்றொரு அடையாளமாக மாறியுள்ளது.
இதனை ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா திறந்து வைத்தார். பனி படர்ந்த மலைகள், காஷ்மீர் பாரம்பரிய சமையல் கைவண்ணத்தில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், மேக கூட்டங்கள் எனப் பரந்த இமயமலையின் அமைப்பை இந்தச் சுழலும் உணவகத்தில் அமர்ந்தபடி சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.
இதோடு பனி சறுக்கு ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் Ski Drag லிப்ட் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
















