டெல்லியில் நடைபெற்ற 2025-ம் ஆண்டுக்கான தேசிய எரிசக்தி சேமிப்பு விருது விழாவில் வெற்றியாளர்களுக்கு விருது வழங்கிக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கெளரவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14 -ம் தேதியன்று தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தின் ஒரு பகுதியாக விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், இந்த ஆண்டும் நடைபெற்ற தேசிய எரிசக்தி சேமிப்பு விருது விழாவின் போது குடியரசுத் தலைவர், வெற்றியாளர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டினார்.
















