செய்யமுடியாத திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவித்துத் திமுக திட்டமிட்டு வாக்குகளை கபளீகரம் செய்ய முயல்வதாக முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்தரம் பகுதியில் பாஜக சார்பில் பூத் கமிட்டி பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்காக எதுவுமே செய்யாத அரசாகத் திமுக அரசு இருப்பதாக விமர்சித்தார்.
110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 40 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும், 245 அறிவிப்புகளைத் திமுக அரசு திரும்பப் பெற்றுவிட்டதாகவும் விஜயதரணி தெரிவித்தார்.
















