சிட்னி பயங்கரவாத தாக்குதலுக்குப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய மக்கள் சார்பில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும், இந்தத் துயரமான தருணத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
















