தனக்குத் தானே பெருமை பேசிக் கொண்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jan 24, 2026, 06:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனக்குத் தானே பெருமை பேசிக் கொண்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 02:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பட்டியல், பழங்குடி சமூக மக்கள் முன்னேற்றத்துக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியைச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், 100 க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் இருந்த 1,331 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில், தற்போது, 1,200 மாணவர் விடுதிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

100 க்கும் அதிகமான விடுதிகள் மூடப்பட்டுள்ளன. சுமார் 98,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட இந்த விடுதிகளில், தற்போது, 65,000 மாணவர்கள் மட்டுமே தங்கி படித்து வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

சுத்தமான அறைகள், சுகாதாரமான குடிநீர், தரமான உணவு என்ற அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்கப்படாததால், மாணவர்கள், இந்த விடுதிகளில் சேர்ந்து படிக்க விருப்பம் காட்டுவதில்லை.

குறிப்பாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தரமற்றதாக இருப்பதால், அது வீணாகி, கால்நடைகளுக்கு உணவாக விற்கப்படுவதை, ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். பட்டியல் சமூக மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க வேண்டும் என இந்த மாணவர் விடுதிகள் அமைக்கப்பட்ட நோக்கத்தையே, திமுக அரசு சிதைத்து விட்டது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

பட்டியல், பழங்குடி சமூக மக்கள் முன்னேற்றத்துக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியைச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

அந்த நிதியை, இந்த விடுதிகளை மேம்படுத்தப் பயன்படுத்துவதிலிருந்து, திமுக அரசை எது தடுக்கிறது? இந்த அழகில், சமூக நீதி விடுதி என்று பெயர் மாற்றம் செய்தோம் என, இரண்டு நாட்கள் விளம்பர நாடகம் நடத்தி, தனக்குத் தானே பெருமை பேசிக் கொண்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

உதட்டளவில் சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, பட்டியல் சமூக மக்கள், மாணவர்கள் முன்னேற்றத்தில் முதலமைச்சர் காட்ட வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: bjpDMKbjp k annamalaiMK StalinChief Minister Stalin was boasting about himself - Annamalai alleges
ShareTweetSendShare
Previous Post

சட்டமன்ற தேர்தலில் அமமுக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் – டிடிவி தினகரன்

Next Post

அமித்ஷாவின் வியூகம், திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது – வானதி சீனிவாசன்

Related News

திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் – அன்புமணி

வெயிலில் கருகிய நெற்பயிர்கள் -காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு – நாமக்கலில் மீண்டும் பரபரப்பு

மதுரை முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா!

“மத்திய அரசின் பல்வேறு கடன் உதவிக்காக ரூ.9,270 கோடி விடுவிப்பு”

கந்துவட்டி பிரச்னை – எண்ணெய் விற்பனை கடையை சூறையாடிய நபர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் – பிரதமர் மோடி

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை நேர்காணல் செய்த இபிஎஸ்!

ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவனை வெளியீடு!

வந்தே பாரத் ஸ்லீப்பரில் செல்லப் பிராணியை கொண்டு செல்ல கூண்டு – குவியும் பாராட்டு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர்!

சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் – திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் விலகி செல்லும் டெக்டோனிக் தட்டுகள் -புதிய பெருங்கடல் உருவாக வாய்ப்பு!

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை செல்கிறது – பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி அதற்கு, இதுவே சாட்சி” – அண்ணாமலை கடும் விமர்சனம

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies