தஞ்சை பெருவுடையார் கோயிலில் மார்கழி மாதம் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு மஹாநந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள மஹா நந்தியம் பெருமானுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட மஞ்சள், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மேலும், அருகம்புல், வில்வ இலை, பூக்களால் நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனையும் காட்டப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
















