மதுரையில் திமுக நிர்வாகி ஒருவர் அனுமதியின்றி மரங்களை வெட்டி விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி எதிரே திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
இதில், திமுக எம்பி கனிமொழி கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விழா தொடர்பான ஏற்பாடுகளைக் கவனித்து வந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான இளமகிழன் என்பவர், மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த மரங்களை வெட்டி விற்பனை செய்து லாபம் ஈட்டியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக உசிலம்பட்டி சார் ஆட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















