மதுரையில் எல்ஐசி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பெண் மேலாளர் உடல் கருகி உயிரிழந்தார்.
மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள கட்டடத்தின் 2ஆம் தளத்தில், எல்.ஐ.சி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்றிரவு சுமார் எட்டரை மணி அளவில், அலுவலகத்தில் தீப்பற்றியது. மளமளவெனத் தீ பரவிய நிலையில், அலுவலகத்தில் இருந்த கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், தீயை அணைத்து உள்ளே இருந்தவர்களை மீட்டனர்.
எனினும் கல்யாணி நம்பி என்ற கிளை மேலாளர், தீயில் கருகி உயிரிழந்தார். மின்கசிவு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
















