ஆப்கானிஸ்தானின் காந்தஹார் பாலைவனப் பகுதியில் நடைபெற்ற டெசர்ட் சஃபாரியை பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
வலைகுடா நாடுகளில் முக்கிய பொழுது போக்கு நிகழ்ச்சியாக டெசர்ட் சஃபாரி விளங்குகிறது. அதேபோல் உலகெங்கும் உள்ள பாலை வனப் பகுதிகளிலும் இந்த டெசர்ட் சஃபாரி முக்கிய பொழுது போக்காகவே பார்க்கப்படுகிறது.
மணற் பரப்பில் அதிவேகமாக இயக்கப்படும் கார்களை பார்ப்பதற்கே கார் பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் கூடுவார்கள்.
அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் உள்ள காந்தஹார் பாலைவனப் பகுதியிலும் டெசர்ட் சஃபாரியை மக்கள் ஒரு முக்கிய திருவிழாவாகவே கொண்டாடுகின்றனர்.
அதன்படி அங்குள்ள மணல் குன்றுகளில் அதிவேகமாக காரை இயக்கி டெசர்ட் சஃபாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். தொடர்ந்து இரவு வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மக்கள் வாண வேடிக்கைகளை வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
















