அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் பழமையான பாலம் ஒன்று வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது.
அயோவா மாகாணத்தின் லான்சிங் பகுதியில் மிசிசிப்பி ஆற்றின் குறுக்கே பிளாக் ஹாக் என்ற பாலம் 1931 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இரும்பு பொருட்களால் கட்டப்பட்டிருந்தஇந்தப் பாலம் பலஆண்டுகளாகப் போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வந்தது.
புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பழைய பாலத்தில் வெடிமருந்துகள் வைக்கப்பட்டு துல்லியமாகஇடித்துத் தகர்க்கப்பட்டது.
















