அப்பாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மிகவும் ஆசையாக இருப்பதாக நடிகர் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள கொம்பு சீவி திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் அருகே உள்ள சாந்தி திரையரங்கில் படத்தைக் காண சண்முக பாண்டியன் மற்றும் படக்குழுவினர் வருகை தந்தனர்.
அப்போது தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சண்முக பாண்டியன், தனது தந்தை விஜயகாந்தின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை படுவதாகவும், அவரின் வாழ்க்கை வரலாற்றை எளிதாக எடுக்க முடியாது எனவும் கூறினார். சரியான இயக்குநர் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் அரசியலில் இப்போதைக்கு ஆர்வம் இல்லை என்றும் தெரிவித்தார்.
















