திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியில் கூட்டு குடிநீர் குழாய் உடைந்தபோது சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கார் 5 அடி பள்ளத்தில் உள்வாங்கியதால் பதற்றம் நிலவியது.
சாத்தனூர் அணையின் கொளமஞ்சனூர் பிக்கேப் அணையில் இருந்து திருவண்ணாமலை மாநகருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 55 கோடி ரூபாய் மதிப்பில் குழாய்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததால் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே கூட்டு குடிநீர் திட்டக் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது.
அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் 5 அடி பள்ளத்தில் உள்வாங்கியது. இதனை தொடர்ந்து, தண்ணீர் நிறுத்தப்பட்டு பொதுமக்களின் உதவியுடன் கயிறுக் கட்டி கார் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது காரில் ஆட்கள் இல்லாததால் உயிர் தேசம் தவிர்க்கப்பட்டது.
















