ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
உக்ரைன் நேட்டோ நாடுகளை இணைவதை எதிர்த்துக் கடந்த 2022 பிப்ரவரியில் அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில், அந்நாட்டு ஆயுதப் படைகளின் செயல்பாட்டு பயிற்சித் துறையின் லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ் உயிரிழந்தார்.
இந்தக் கார் குண்டுவெடிப்புக்குப் பின்னால் உக்ரைனின் சதி உள்ளதா என்ற கோணத்தில் ரஷ்யா விசாரணை நடத்தி வருகிறது.
















