இந்தியா-நியூசிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடியுடன் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தொலைபேசியில் பேசினார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நியூசிலாந்து பிரதமர், தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரி 95 சதவீதம் குறைக்கவோ அல்லது நீக்கவோ வழிவகை செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
இதனால் அடுத்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்தில் ஏற்றுமதி 9,863 கோடியில் இருந்து 11,650 கோடியாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
















