கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
கேரளாவின் ஆழப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டத்தின் சில இடங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய் பரவலின் தீவிரம் மதிப்பிடப்பட்டு வரும் நிலையில், கோழி இறைச்சி நுகர்வுக்கு இதுவரை எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
தேவைப்பட்டால் கோழிகளை பறிமுதல் செய்து அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கேரள கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலத்தில் பறவை காய்ச்சல் பரவுவதால் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
















