கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 103 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோவை குனியமுத்த்தூர் பகுதியில் வசித்து வரும் ஜெபா மார்ட்டின் என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்ஆசிரியராகப் பணியாற்றி வரும் நிலையில், கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
காலை வீடு திரும்பிய நிலையில், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 103 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், வீட்டின் பூட்டை உடைக்காமல் கதவை திறந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், நன்றாகப் பழகியய நபர்களில் யாராவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















