இளம் இந்திய கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
வீரம், கலை, கலாசாரம், சமூக சேவை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய சிறார் விருது ஆண்டுதோறும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் , நடப்பாண்டுக்கான விருதுக்கு 20 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சிறுவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த விருதை கிரிக்கெட் போட்டிகளில் சாதனை மேல் சாதனை குவித்து வரும் 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி பெற்றுக் கொண்டார்.
இதேபோன்று, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ராணுவ வீரர்களுக்கு தேநீர், பால் வழங்கிய பஞ்சாப்பைச் சேர்ந்த ஷ்ரவன் சிங் என்ற 10 வயது சிறுவனுக்கும் பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதை குடியரசு தலைவர் வழங்கினார்.
















