ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 29 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை மலேசிய பிரதமராக நஜீப் ரசாக் தொடர்ந்து 9 ஆண்டுகள் பதவி வகித்தார். அப்போது மலேசியா மேம்பாட்டு நிதியில் இருந்து 75 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பண மோசடி வழக்குகளில் நஜீப் ரசாக் குற்றவாளி என கோலாலம்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், 29 ஆயிரம் கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
















