இங்கிலாந்தில் பழமையான கார்கள் சாலையில் அணிவகுத்து சென்றது மக்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
1886-ல் கார்ல் பென்ஸ் கண்டுபிடித்த மோட்டார்வேகன் எனப்படும் மூன்று சக்கர வாகனத்தில் இருந்து தொடங்குகிறது பல்வேறு வகையான கார்களின் வரலாறு.
இவ்வாறு மூன்று சக்கர வாகனத்தில் ஆரம்பித்துப் பெட்ரோல், டீசல், மின்சாரம் எனப் பல்வேறு எரிபொருள்களில் இயங்கும் கார்கள், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய, சுயமாக இயங்கும் வாகனங்கள் வரை வந்துவிட்டன.
இருப்பினும் பழமையான கார்கள் அனைவருக்கும் விருப்பமான ஒன்றாக உள்ளது. அவற்றை மறந்துவிட கூடாது என்பதற்காக உலக நாடுகளில் அவ்வப்போது கண்காட்சி போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இங்கிலாந்தில் பழமையான கார்கள் சாலையில் அணிவகுத்து சென்றதோடு, மக்களுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டன.
















