அமெரிக்காவில் தனது நிறுவனத்தை விற்ற பிறகு ஊழியர்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாயை போனஸாக தொழிலதிபர் ஒருவர் வழங்கியுள்ளார்.
லூசியானாவை சேர்ந்த தொழிலதிபர் கிரஹாம் வாக்கர். இவரது குடும்பத்திற்கு சொந்தமான ஃபைபர்பாண்ட் என்ற நிறுவனம் அமெரிக்காவில் செயல்பட்டு வந்தது.
ஆனால், பல்வேறு காரணங்களால் ஃபைபர்பாண்ட் நிறுவனத்தைக் கிரஹாம் வாக்கர் விற்பனை செய்துள்ளார்.
அதன் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய் பணத்தை தனக்காக மட்டுமே வைத்து கொள்ளமால், அவர் செய்த செயல் அனைவரின் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.
அப்படி அவர் செய்த விஷயம் தான், விற்பனை தொகையில் 15 சதவீதத்தை ஊழியர்களுக்கு வழங்கியது.
இதுகுறித்து பேசிய கிரஹாம், கடினமான காலங்களிலும் நிறுவனத்திற்கு உறுதுணையாக இருந்த ஊழியர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
















