உத்தரப்பிரதேசத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 வீரர்கள் காயமடைந்தனர்.
பாத்கலா பயிற்சி மைதானத்தில் சனிக்கிழமை மாலை வழக்கமான துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது நிகழ்ந்த வெடி விபத்தில் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் மிர்சாபூர் மற்றும் பெஹத் பகுதிகளைச் சேர்ந்த போலீஸ் குழுக்கள் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்த வீரர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
















