கோவை மாவட்டம் சூலூர் அருகே விதிகளை மீறித் திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளின் போது சாலையின் நடுவே கொடிக்கம்பங்கள் நடக் கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இதனை பின்பற்றாத திமுகவினர் பல்லடம் சலையின் நடுவே துளையிட்டு கட்சி கொடிகளை அமைத்துள்ளனர்.
முதலமைச்சரின் வருகைக்காக விதிகளை மீறிச் செயல்படும் திமுகவினர் மீது மக்கள் அதிருப்தியடைந்தனர்.
















