சேலத்தில் நடைபெற்ற பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு சார்பில் சேலத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற கூட்டணி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி பாமக தலைவராக ராமதாஸும், பொதுச் செயலாளராக முரளிசங்கர் மற்றும் கவுரவ தலைவராக ஜி.கே.மணியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
















