கடற்கரையில் பேனா வைக்கும் திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க நிதியில்லை என்பது வெட்கக்கேடான விஷயம் என அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், அதிமுக மக்களி பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுக்கும் கட்சி எனவும், திமுக பிரச்னைகளை மட்டுமே பேசி வாக்கு சேகரிக்கும் கட்சி என்றும் விமர்சித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
















