திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 24 மணி நேரத்தில் 83 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சாதனை படைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை மற்றும் சொர்க்கவாசல் திறப்பு காரணமாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இலவச தரிசனத்திற்காக 15 மணி நேரம் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பொதுவாக வெள்ளிக்கிழமை தினம் ஏழுமலையானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் இருப்பதால் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்ய முடியும் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் 83 ஆயிரத்து 32 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சாதனைப் படைத்துள்ளதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 4 கோடியே 10 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
















