வெனிசுலா நாட்டின் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா, ஈரான், கியூபா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு என்றும், இது சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதல் வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் செயல் எனவும், அமெரிக்காவின் இந்த ராணுவத் தாக்குதல் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளது.
கியூபா அதிபர் மிகுயல் டயஸ்-கனெல் வெளியிட்டுள்ள பதிவில், ஒருதலைப்பட்சமான ராணுவ நடவடிக்கையை நிராகரிப்பதாகவும் , வீரமிக்க வெனிசுலா மக்களுக்கும், ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவிற்கும் எதிராக அமெரிக்கா ‘அரசு பயங்கரவாதத்தை’ ஏவியுள்ளதாகக் கூறியுள்ளார்.
















