திருப்பூர் அருகே 13வயது சிறுவன், இன்ஸ்டாகிராம் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கொடுவாய் பகுதியை சேர்ந்த 13வயது சிறுவன் தனது இஸ்டாகிராமில், ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாகி உள்ளார். இவரின் சமூக வலைத்தள பக்கத்தை ஏராளமானோர் பின் தொடர்ந்துள்ளனர். இந்தநிலையில் தான் வணிகத்தில் ஈடுபடுவதாகவும் தன்னிடம் பணத்தை கொடுத்தால் இரட்டிப்பாக்கி தருவதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார். மேலும் தனது பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லை என இன்ஸ்டாகிராம் மூலம் அவர் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. .இதனை நம்பி ஏராளமானோர் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். எனினும் சிறுவன் பணத்தை திரும்பி தரவில்லை எனவும் அந்த பணத்தில் அவர் கார் வாங்கி உள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
















