திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழா முடிந்தும், குப்பை அள்ளும் வாகனத்தில் தூய்மை பணியாளர்கள் அழைத்து செல்லப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.
திருவண்ணாமலை மாநகராட்சி சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினார்.
விழா முடிந்தவுடன், தூய்மை பணியாளர்கள் குப்பை அள்ளும் வாகனத்தில் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
















