பொங்கல் திருநாளை ஒட்டி, உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது. அதனை நேரலையில் பார்க்கலாம்.
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெறுகிறது
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைத்தார்
பாலமேடு மஞ்சமலை ஆற்றுப்பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க வாடிவாசலில் காளைகள் சீறிப்பாய தயாராக உள்ளன
மஞ்சமலை ஆற்றுப்பகுதியில் உள்ள வாடி வாசலில் இருந்து காளைகள் சேகரிக்கும் இடம் வரை இரு புறங்களிலும் எட்டடி உயரத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளை உரிமையாளருக்கு கார், டிராக்டர், கன்றுடன் கூடிய நாட்டுப் பசு மாடு இருசக்கர வாகனம் கட்டில் பீரோ தங்கக் காசு அண்டா சைக்கிள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்க உள்ளனர்.
போட்டியில் ஆயிரம் காளைகளும் 600 வீரர்களும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்
காளைகள் மற்றும் வீரர்களுக்காக தனித்தனியே மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
108 ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.
வாடிவாசலில் இருந்து 50 மீட்டர் தொலைவிற்கு காளைகள் மற்றும் வீரர்கள் காயம் அடைவதை தடுக்க தேங்காய் நார்கள் தூவப்பட்டு உள்ளது
வாடிவாசலின் இருபுறமும் போட்டியை பார்வையாளர்கள் கண்டு ரசிக்க பார்வையாளர்கள் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன
தென் மண்டல ஐஜி விஜேந்திர பிதாரி தலைமையில் 2500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
















