திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திரௌபதி திரைப்பட இயக்குநர் மோகன்ஜி, சாமி தரிசனம் செய்தார்.
அண்ணாமலையார் கோயிலில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரத்தில் இயக்குநர் மோகன்ஜி சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவண்ணாமலையை ஆட்சி செய்த வல்லாள மகாராஜா பற்றிய படம் எடுத்திருப்பது பெருமை என்றும், திரௌபதி இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் இல்லை எனவும் தெரிவித்தார்.
ஜனநாயகன் படம் வந்தாலும் திரௌபதி படம் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். மேலும், ஒரு திரைப்படத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கினால் அந்த படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படும் என மோகன்ஜி தெரிவித்தார்.
















