அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.
அமேசான் மழைக்காடுகளில் வெளியுலக தொடர்பு எதுவும் இல்லாமல் வாழ்ந்து வருபவர்கள் மாஷ்கோ பிரோ பழங்குடியினர்.
இயற்கையாகவே வெளியாட்களை கண்டால் மாஷ்கோ பிரோ பழங்குடியினர் மிகவும் ஆக்ரோஷமாக தாக்க முற்படுவர்.
இந்நிலையில் லெக்ஸ் ஃபிரிட்மேன் பாட்காஸ்டில் சூழலியல் ஆர்வலரான பால ரொசோலி என்பவர் பகிர்ந்துள்ள வீடியோவில் பழங்குடியினர் தங்கள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு உணவு பொருட்கள் நிரப்பட்ட படகை ஏற்றுக் கொண்டதை பார்க்க முடிகிறது.
பல நூற்றாண்டுகளாக மாறாத பழக்கங்களை கொண்ட மாஷ்கோ பிரோ பழங்குடியினரை துல்லியமாக பார்த்தது இதுவே முதல் முறை என்று ரொசோலி தெரிவித்துள்ளார்.
வெளி உலகத்துடன் தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வரும் இவர்கள், தற்போது அடிக்கடி வெளியே தென்படுவதற்கான அவர்களது வாழ்விடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதே முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஊடுருவல் மற்றும் மரத் தொழிற்சாலைகளுக்காக காடுகளுக்குள் போடப்படும் நீண்ட தூர சாலைகள் போன்றவை பழங்குடியினர் அடிக்கடி தென்படுவதற்கான காரணங்களாக சொல்லபடுகிறது.
















