மகர விளக்கு பூஜை நிறைவடைய உள்ளதை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுதினம் மூடப்படுகிறது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் கடந்த 14ம் தேதி நடைபெற்றது.
இந்தநிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் வரும் 20ம் தேதி நிறைவடைய உள்ளது.
இதையொட்டி அன்றைய தினம் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, காலை 6 முப்பது மணி அளவில் கோயில் நடை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாளை வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
















