கம்பிகள் இல்லாமல் காற்றிலேயே மின்சாரத்தை கடத்தி மின் விநியோகம் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது ஃபின்லாந்து
மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொட்டு, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மின்சாரத்தை கடத்த உலோகக் கம்பிகளே இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீர், காற்று, சூரிய ஆற்றல், அணுமின் ஆற்றல் உள்பட பல்வேறு வழிகள் மூலம் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டபோதும், மின் கடத்திகள் உலோகக் கம்பிகளாகவே இருந்து வருகின்றன…. இந்த சூழலில் ஃபின்லாந்து விஞ்ஞானிகள் மாபெரும் தொழில்புரட்சியை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்…
ஃபின்லாந்தின் HELSINKI பல்கலைக்கழகம், OULU பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்களாக மாறியுள்ளனர்…காற்றில் மின்சாரத்தை கடத்துவதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்…இதிலுள்ள முக்கியமான அம்சம் என்னவென்றால், High-intensity Ultrasonic Waves காற்றில் ஒரு கண்ணுக்கு தெரியாத பாதையை உருவாக்குவதுதான்…
இதுபோன்ற ultrasonic waves காற்றில் ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தை உருவாக்கி, அவ்வழியாக மின்சாரத்தை சிந்தாமல், சிதறாமல் நேர்கோட்டில் வழிநடத்துகின்றன… இது ஒரு மாயக் கம்பி போன்று செயல்படுவதால், இதற்கு Acoustic Wire என்று பெயரை விஞ்ஞானிகள் வைத்துள்ளனர்… ஒலி அலைகள் மட்டுமின்றி, ஒளியை பயன்படுத்தி மின்சாரத்தை கடத்தும் தொழில்நுட்பத்திலும் ஃபின்லாந்து முன்னேற்றம் கண்டுள்ளது.
Power-by-Light எனப்படும் இந்த முறையில், அதிநவீன லேசர் கதிர்கள் மூலம் மின்சாரம் தொலைவில் உள்ள Receivers களுக்கு அனுப்பப்படுகிறது.
அணுமின் நிலையங்கள் மற்றும் உயர் மின்னழுத்த நிலையங்கள் போன்ற ஆபத்தான இடங்களில், கம்பிகள் மூலம் மின்சாரத்தை கடத்துவது விபத்துகளுக்கு வழிவகுக்கும். லேசர் தொழில்நுட்பம் அங்கே பாதுகாப்பான மின் கடத்தலை உறுதி செய்கிறது. மின்சார அதிர்ச்சிகள் ஏற்படாமல் தடுக்க இது ஒரு சிறந்த தீர்வாகவும் பார்க்கப்படுகிறது. இதற்கு இணையாக, காற்றில் ஏற்கனவே மிதந்துகொண்டிருக்கும் ரேடியோ அலைகளை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பமும் வளர்ந்து வருகிறது. இது ‘Wi-Fi for power’ என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான சிறியசென்சார்களுக்குத் தேவையான மின்சாரத்தைக் காற்றிலிருந்தே பெற முடியும். இதற்காகத் தனியாக பேட்டரிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது, இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும். தற்போது இந்தத் தொழில்நுட்பங்கள் ஆய்வக அளவிலும், சோதனைக் கட்டத்திலும் இருந்தாலும், இவை எதிர்கால உள்கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்கக் கூடியவை.
வயர்லெஸ் சார்ஜிங் என்பது மின்காந்த புலங்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது… தற்போது ஃபின்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் தொழில்நுட்பம் வயர்லெஸ் வைஃபை-ஐ ஒத்ததாக உள்ளது… ஹெல்சின்கி பல்கலைக்கழக ஆராய்ச்சியின்படி, காந்த வளைய ஆண்டனாக்கள், குறைந்த தூரங்களுக்கு இடையில் அதிக செயல்திறனுடன் வயர்லெஸ் முறையில் மின்சாரத்தை கடத்த முடியும் என்று கூறப்படுகிறது…
ஃபின்லாந்தின் அபார கண்டுபிடிப்பு, ஒரு வைஃபை ரூட்டர் போன்று செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உலக நாடுகளும் புதிய தொழில்நுட்பத்தின் செயல்பாட்டை உற்று நோக்கி வருகின்றன…
















