நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான படத்தின் மூலம் தென்கொரியாவின் உடனடி நூடுல்ஸ் ஏற்றுமதி, வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
கே-பாப் டெமான் ஹன்டர்ஸ் என்ற திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உலகளாவிய வெற்றி பெற்றது.
இப்படத்தில் பல்வேறு உடனடி நூடுல்ஸ்கள் இடம்பெற்ற நிலையில் உலகம் முழுவதிலும் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொரியாவின் பாரம்பரிய உணவான ராமியோனை தங்களது சமையல் அறையில் சமைத்து வருகின்றனர்.
இதனால் கடந்த சில மாதங்களில் மட்டும் கொரிய நூடுல்ஸ் ஏற்றுமதி பல மடங்கு அதிகரித்து, புதிய வருவாய் சாதனையை படைத்துள்ளது.
















