ஜம்மு-காஷ்மீரில் ரம்யமான பனிப்பொழிவுக்கு மத்தியில் வந்தே பாரத் ரயில் பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் திரும்பும் திசையெல்லாம் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது.
இந்த பனிப்பொழிவுக்கு மத்தியில் வந்தே பாரத் ரயில் சீறிப்பாய்ந்து சென்றது. பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையும் மூடப்பட்டது. ஆனால், வந்தே பாரத் ரயில் மட்டும் தடையின்றி இயங்கி பயணிகளுக்கு பேருதவியாக இருந்தது. இதுதொடர்பான வீடியோவை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
















