ஆப்பிரிக்கா கண்டம் படிப்படியாக பிரிந்து, புதிய பெருங்கடல் உருவாக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் மேலோடு தோராயமாக 15 முதல் 20 வரையிலான டெக்டோனிக் தட்டுகளால் ஆனது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள டெக்டோனிக் தட்டுகள் ஒன்றையொன்று விட்டு விலகிச் செல்கின்றன.
இதன் காரணமாக ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்குப் பகுதியில் பிளவு ஏற்பட்டு வருகிறது. இந்த பிளவு ஆழமாகி, இறுதியில் கடல் நீர் உள்ளே புகுந்து புதிய கடல் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆப்பிரிக்க கண்டம் எதிர்காலத்தில் இரண்டாக பிரியும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் டெக்டோனிக் தட்டுகள் விலகிச் செல்லும் மாற்றம் மிக மெதுவாகவே நிகழ்கிறது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதியில் உள்ள நிலத்தில் சில மில்லி மீட்டர்கள் அளவு மட்டுமே பிளவு ஏற்படுகிறது.
ஆகையால், புதிய கடல் உருவாக மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு புதிய கடல் உருவாகும் பட்சத்தில் பூமியின் கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களின் வரைபடம் முற்றிலும் மாறும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
















