கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே இருதரப்பு மோதலை தடுக்க வந்தவர்கள் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த சுமன் என்பவருக்கும், அண்டை வீட்டு பெண்ணான மலர் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவ்வழியாக சென்ற மாது மற்றும் அவரது தந்தை சண்டையை தடுக்க முயன்றனர்.
இதில் ஆத்திரமடைந்த சுமன் இருவர் மீதும் இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















