நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவதாக, மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாய சங்கத் தலைவர் முருகன், மேலூர் அடுத்த வெள்ளலூர் பகுதியில் உள்ள கோயில்களுக்குச் சென்று காவல் தெய்வங்களை வழிபட்டார். அதனைத் தொடர்ந்து, ஊர் முக்கியஸ்தர்கள், அம்பலக்காரர்கள் மற்றும் வணிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
தான் வெற்றி பெற்றவுடன், மேலூர் தொகுதியில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும், நெல்மணிகள் மழையில் நனையாத வகையில் ஷெட் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
















