மத்திய கிழக்கு போர் குறித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க்கும் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் தொடங்கி சுமார் ஒரு மாதம் கழித்து, டிரம்ப்புடன் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
இருவரின் தொலைபேசி உரையாடலில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கும் இணைந்திருந்ததாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரு நாட்டுத் தலைவர்களின் அதிகாரபூர்வ தொலைபேசி உரையாடலில் தனி நபர் ஒருவர் பங்கேற்றது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளிலும் எலான் மஸ்க் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
















