இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று மொகாலியில் தொடங்குகிறது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.
இப்போட்டியானது 11ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டியானது இன்று மொகாலியில் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது சொந்த காரணங்களால் விலகியுள்ளார். அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ரஷீத் கானும் இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இருப்பினும் உலகக்கோப்பை தொடரை போல் ஆப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த வீரர்களுடன் களமிறங்க உள்ளது.
அதேபோல் மொஹாலி மைதானம் அதிக பவுண்டரி தூரத்தை கொண்டுள்ளது. இந்த மைதானத்தில் சராசரி ஸ்கோராக 183 ரன்கள் உள்ளது. இதன் மூலமாகவே மொஹாலி மைதானத்தின் பிட்ச்சில் தார் ரோடை போல் தாராளமான ரன்களை குவிக்க முடியும்.
முதலில் பேட்டிங் செய்யும் அணிகளை விடவும் சேஸிங் செய்யும் அணிகளுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். இதுவரை நடைபெற்றுள்ள 6 டி20 போட்டிகளில் 4ல் சேஸிங் செய்த அணிகளும், 2ல் முதல் பேட்டிங் செய்த அணிகளும் வென்றுள்ளன.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி 85% வெற்றி பெறும் என்றும், ஆப்கானிஸ்தான் அணி 15% வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.